Breaking News

மே 1 முதல் கட்டிட அனுமதி பெற நேரில் செல்ல வேண்டாம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெறவேண்டிய பொதுமக்கள் மே 1ஆம் தேதி முதல் நேரில் வரத்தேவையில்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது


 

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மே 1 ம்தேதி முதல் ஆன்லைனில் தானியங்கி ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி பெறும் முறையை மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவுசெய்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் கட்டிட அனுமதி கோரி விண்ணப்பித்து உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback