ஜார்கண்ட்டில் 1200 அடி உயர மலைப்பகுதியில் ரோப்கார்கள் மோதி விபத்து ஹெலிகாப்டர் மீட்பு பணி வீடியோ
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு அருகில் உள்ள திரிகுட் மலையில் நேற்று ரோப்கார்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று பாபா வைத்யநாத் கோவில். இது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ளது. திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 1 பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து நிகழ்ந்த திரிகுட் மலையில், இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்திய ராணுவம் மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீஸ் என பல்வேறு தரப்பினரும், அவர்களுடன் சேர்ந்து உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ரோப் காரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/IAF_MCC/status/1513502133257404417
Tags: இந்திய செய்திகள்