Breaking News

TNPSC தேர்வுகளுக்கு தமிழக அரசின் இலவச ஆன்லைன் பயிற்சி!! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குருப் 2, மற்றும் குருப் 4 ஆகிய இரண்டுக்கும் இன்னும் சில மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

 


TNPSC போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்களுக்காக தமிழக அரசு Virtual Learning Portal' என்ற இணைய பக்கத்தை அரசு உருவாக்கியுள்ளது.

இந்த இணையதள பக்கத்தில் 

போட்டித் தேர்வுகளுக்கு உரிய பாட குறிப்புகள், 

முந்தைய ஆண்டு போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள்

இதில் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம், 

மாதிரி வினாத்தாள், 

இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறது. 

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான தகவல்கள், 

தேவையான புத்தகங்கள் 

போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் 

இந்த வகுப்பிற்கு என்று தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது முற்றிலும் இலவசம் ஆகும்

TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் ஆகும் நபர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். 

TNPSC தேர்வுகளுக்கு தமிழக அரசின் இலவச ஆன்லைன் பயிற்சி!! விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் https://tamilnaducareerservices.tn.gov.in/Registration/vle_candidate_register என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும். 

இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள `பதிவு ' என்பதைத் தேர்வு செய்யவும். 

அடுத்து அதில் உங்கள் பெயர், கல்வித்தகுதி, ஆதார் எண், ஊர், தொலைபேசி எண் போன்று அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்து, உங்களுக்கான ஐடியை உருவாக்கிக்கொள்ளவும்.

அடுத்து உங்கள் ஜடி பாஸ்வேர்டு போட்டு உள் நுழைந்து தேவையானவற்றை படித்து கொள்ளுங்கள்

 மேலும் விவரங்களுக்கு:-

https://tamilnaducareerservices.tn.gov.in/Registration/vle_candidate_register

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback