Breaking News

ஏடிஎம் மூலம் தங்கம் வாங்க ,விற்கும் வசதி இந்தியாவில் அறிமுகம்

அட்மின் மீடியா
0
ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கும் வசதி இந்தியாவில் ஹைதரபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு்ளளது.

ஹைதராபாத் கோல்ட்சிக்கா லிமிட்டெட் நிறுவனம் தொடங்கியுள்ள இந்த ஏடிஎம்-ல் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்யலாம்.

ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் ஐந்து கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. அவை உயர்தர, BIS ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் ஆகும்

உங்கள் வங்கி ஏடிஎம் கார்டு,கிரெடிட் கார்டு மூலமாக இந்த மெஷினில் தங்கத்தை வாங்க முடியும். 

மேலும் கோல்ட் சிக்கா லிமிட்டெட் நிறுவனம் தங்கத்தை வாங்க பிரீ பெய்டு,போஸ்ட் பெய்டு கார்டுகள் வழங்கப்படுகின்றன.

ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல, ஏடிஎம் மெஷினில் தங்கத்தை  0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை வாங்கலாம்  

தங்கத்தை விநியோகிக்கும் ஏடிஎம் சேவைக்காக இந்த நிறுவனம் சென்னையைச் சேர்ந்த ட்ரூனிக்ஸ் டேட்டாவேர் எல்.எல்.பி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்தியாவில் தங்கத்திற்கான ஏடிஎம் தொடங்குவது இதுவே முதல்முறையாகும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 3000 தங்க ஏடிஎம்களை நிறுவ இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback