Breaking News

முதியோர் இல்லங்கள், மகளிர் பணிபுரியும் விடுதிகள் பதிவுசெய்யாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை

அட்மின் மீடியா
0

தருமபுரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் மகளிர் பணிபுரியும் விடுதிகள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும் என ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில்:-

தருமபுரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் மகளிர் பணிபுரியும் விடுதிகள் மாவட்ட நிர்வாகத்தால் முதியோர் இல்லங்கள் முதியோர் நலச்சட்டம் 2007 (ம) 2009-ன் கீழ் பதிவு செய்யப்பட்டும், மகளிர் பணிபுரியும் விடுதிகள் தமிழ்நாடு பெண்கள், விடுதிகள் மற்றும் குழந்தைகள் நல விதிகள் 2015-ன் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும்.

பதிவு செய்யாமல் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட சமூக நலன் அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி. தொலைபேசி எண் - 04342 - 23308 அணுகி பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பதிவு செய்யாமல் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.






Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback