Breaking News

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு!

அட்மின் மீடியா
0

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றி விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருக்கிறது. மேலும் விதிமுறைகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்து இருக்கிறது



திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் ராதிகா, தனக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த மனு தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 

அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரியவிதிகளை வகுக்க வேண்டும் என்றும் 

தமிழக சுகாதாரத்துறை செயலர், அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பது தொடர்பாக விதிகள் உருவாக்க வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்

இவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலர் நான்கு வாரங்களுக்கு உள்ளாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback