ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? முழு விவரம்....
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வருகின்ற 14-03-2022 முதல் அடுத்த மாதம் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஆனால்,தாழ்த்தப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு TRB யின் http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு