Breaking News

உத்திரபிரதேசத தேர்தலில் உவைசி கட்சியினர் பெற்ற வாக்குகள் என்ன முழு விவரம்...

அட்மின் மீடியா
0

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 255  இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கிறது. உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல் மந்திரி ஆகிறார். 

மேலும் இதில் குறிப்பாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்ன்வென்றால் பாஜக கட்சி கடந்த தேர்தலில் 312 இடங்களில் வெற்றி பெற்றது , மேலும் கூட்டணி கட்சியினர் 10 இடங்களில் வெற்றி பெற்று மொத்தம் 322 இடங்களை கைப்பற்றியது

ஆனால் இந்த முறை பாஜக 255  இடங்களில் வெற்றி பெற்றது , மேலும் கூட்டணி கட்சியினர் 18 இடங்களில் வெற்றி பெற்று மொத்தம் 273 இடங்களை கைப்பற்றியுள்ளது ஆக கடந்த தேர்தலை விட இந்த முறை பாஜக 57 இடங்களை இழந்துள்ளது

அதேபோல் சமாஜ்வாடி கட்சி கூட்டணி 125  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடதக்கது ஆக கடந்த தேர்தலை விட இந்த முறை சமாஜ்வாடி கட்சி 73  இடங்களை அதிகம் கைபற்றியுள்ளது

அதே போல் உத்திரபிரதேச மாநிலத்தில் முதன்முதலாக தேர்தல் களம் கண்ட  ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளது,மேலும் அக்கட்சி ஒரு சதவீத வாக்குகளைக்கூட பெற முடியவில்லை.

உத்திரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி  100 இடங்களில் போட்டியிட்டது, அதில் மொத்தம் அக்கட்சியினர் பெற்ற வாக்குகள் 4,50929 மட்டுமே 

மேலும் உத்திரபிரதேசத்தில் அக்கட்சியினர்  0.49 வாக்கு சதவிகதம் மட்டுமே பெற்றுள்ளார்கள், மேலும் அக்கட்சியினர் ஒரு இடத்தில் கூட 5000 ஓட்டை தாண்டவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அதற்க்குள் சமூகவலைதளங்கலில் பலரும் உவைசி ஓட்டை பிரித்துவிட்டார், அதனால் தான் பாஜக வெற்றிபெற்றுவிட்டது என வழக்கம் போல் வதந்தி பரப்பி வருகின்றார்கள்


இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:-உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. உத்தர பிரதேச மக்கள் பா.ஜ.க.விற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன்.இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், எங்களுக்காக உழைத்த கட்சியினருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தேர்தல் முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS0510.htm?ac=10

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback