சென்னை புத்தக கண்காட்சி இன்றே கடைசி நாள்: உடனே வாங்க.....
ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் காட்சியாக கருதப்படும் சென்னை புத்தகக்காட்சி இன்றுடன் முடிவடைய இருப்பதனால், கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 45-வது புத்தக கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததால் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்
இதற்கிடையே, புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பிப்.16 முதல் மார்ச் 6 (இன்று) வரை புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.
800 அரங்குகளில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது.மொத்தம் 19 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த புத்தக கண் காட்சி இன்று நிறைவு பெறவுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் காட்சியாக கருதப்படும் சென்னை புத்தகக்காட்சிக்கு கடைசி நாளான இன்று வாசகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தக கண்காட்சிக்கு ஆன்லைனில் டிக்கெட் வாங்க.....
Tags: தமிழக செய்திகள்