மாதவரத்தில் நடுரோட்டில் எரிந்த எலக்ட்ரிக் பைக் வைரல் வீடியோ
மாதவரம் அருகே பேட்டரி மோட்டார் பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் கணேஷ் (21). கல்லூரி படித்து முடித்த இவர் திருவொற்றியூரில் உள்ள டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் வழக்கம்போல் இ பைக்கில் வேலைக்குப் புறப்பட்டு மாதவரம் 200 அடி சாலை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் அருகே வரும்போது பைக் இன்ஜினில் இருந்து லேசாகப் புகை வந்துள்ளது உடனடியாக அவர் வண்டியை நிறுத்திவிட்டு சற்று தூரம் சென்று நின்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து மோட்டார் பைக் திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த வழியாகச் சென்ற குடிநீர் லாரியை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஆனாலும் அதற்குள் அவரது இ பைக் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்துள்ளது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/rajalingam1010/status/1508833149337288707
இதே போல் கடந்த வாரம் புனே நகரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.
ஓலாவின் S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த தீ விபத்தில் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.
வணிக வளாகங்கள் நிறைந்த அங்காடி பகுதியின் சாலையோரத்தில் அந்த ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி உள்ளது. அடுத்த சில நொடிகளில் அது அப்படியே ‘மளமளவென’ தீ பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்
புனேயில் எங்களின் ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த சம்பவம் பற்றி எங்களுக்கு தெரிய வந்தது. இந்த விபத்துக்கான மூல காரணத்தைப் புரிந்து கொள்ள நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் புதிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/suryasp7/status/1507731677405417476
அதே போல் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவில் எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து சிதறிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் துரைவர்மா இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக எலெக்டிரிக்கல் பேட்டரியில் ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை இரண்டு நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இவர் நேற்று இரவு தனது எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டார். இந்நிலையில், திடீரென எலக்ட்ரிக் பைக்கில் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் காரணமாக வீடு முழுவதும் புகைமூட்டமாக மாறியுள்ளது. அப்போது வீட்டில் இருந்த துணிகள் அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீயில் மாட்டிக்கொண்ட துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு முயன்றுள்ளனர். ஆனால் தீ மளமளவென வீடு முழுவதும் தீப்பற்றியதால் கழிவறைக்குள் நுழைந்து தப்பிக்க முயன்ற இடத்திலேயே தீயினால் ஏற்பட்ட புகையில் சிக்கி தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் மூச்சுத்தினறி பலியானார்கள்.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த வேலூர் தெற்கு காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்