இதுதான் பாசம்: இறந்த சகோதரனின் சிலிகான் சிலையை செய்து அதன் மடியில் வைத்து காதணி விழா நடத்திய பாசக்கார சகோதரி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருக்கு வயது 21. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். சகோதரர் மீது அதிக பாசம் கொண்டிருந்த அவரது சகோதரி பிரியதர்ஷினி தனது இரண்டு குழந்தைகளான தாய்மாமன் பாண்டித்துரையின் மடியில் வைத்து காதணி விழாவை நடத்தியிருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரை போலவே சிலை ஒன்றை செய்து அச்சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடத்த பிரியதர்ஷினி முடிவு செய்தார்.
அதன்படி உயிரிழந்த பாண்டித்துரையின் தத்ரூபமான சிலிகான்சிலையை பெங்களூரு கலைஞர்களின் உதவியுடன் உருவாக்கினர்.
இச்சிலையுடன் வீட்டில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பின்னர் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் தாய்மாமன் சிலிக்கான் சிலையை ஊர்வலமாக விழா நடக்கும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குடும்பத்தினர்,உறவினர்கள் சூழ பாண்டித்துரை சிலிகான் சிலையின் மடியில் அடுத்தடுத்து குழந்தைகளை அமர வைத்து மொட்டையடித்து, காதுகுத்தி விழாவை நடத்தினர்.
Tags: தமிழக செய்திகள்