Breaking News

கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் துர்கா பரமேஸ்வரி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடைகள் அமைத்து வியாபாரம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு இந்து அல்லாதவர்கள் மாட்டை கொலை செய்பவர்கள் இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மங்களூருவில் மற்றொரு பிரபல கோயிலான மகாலிங்கேஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 10 ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ள நிலையில் இந்த கோவிலிலும் இஸ்லாமியர்கள் வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் உடுப்பி மாவட்டம் கப்பு என்ற பகுதியில் உள்ள சிவன் கோவில் மற்றும் சிவமோக மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாக்களிலும் மங்களூரு நகரைப் போல இஸ்லாமியர்களுக்கு வணிகம் செய்ய இங்கு அனுமதி இல்லை என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த செயலை கர்நாடக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் கோவில் திருவிழாக்களில் வணிகம் செய்பவர்கள் பெரும்பான்மையானோர் வீதி வியாபாரிகள் அவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback