Breaking News

பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயார்: எஸ்.வி. சேகர்

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒரு பேட்டியின் போது பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 

 


அப்போது நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.இதனால், எஸ்.வி. சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி. சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. 

அதன் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இன்று இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வந்தபோதும் எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். காவல்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி அவர்கள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback