சவுதி பள்ளிகளில் விரைவில் யோகா வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும்
சவுதி அரேபிய ராஜ்ஜியத்தில் உள்ள பள்ளிகளில் விரைவில் விளையாட்டாக யோகா அறிமுகப்படுத்தப்படும் என்று சவுதி யோகா கமிட்டியின் தலைவர் நௌஃப் அல் மர்வாய் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்த விரைவில் பள்ளிகளில் விளையாட்டு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக யோகா பயிற்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவ- மாணவிகளின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் அங்குள்ள பள்ளிகளில் விளையாட்டு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக யோகா பயிற்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கல்வித்துறையுடன் இணைந்து இந்த யோகா வகுப்புகள் நடத்தப்படும் என சவுதி யோகா கமிட்டி தலைவர் நூப் அல்மர்வாய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சவுதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் யோகாவை கற்பித்தல் மற்றும் பயிற்சி செய்வதற்கு அந்நாட்டு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது
Source:-
Tags: வெளிநாட்டு செய்திகள்