துபாய் தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்
துபாய் தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.
சுமார் 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது.இந்த நிலையில்,தொழில் கண்காட்சியில் பங்கேற்க இன்று மாலை தனி விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் துபாய் செல்கிறார்.
பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு:அங்கு சென்று தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.மேலும், கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் கைத்தறி, விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட அரங்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்