Breaking News

எதிர் எதிர்ரே ரயில்கள் வந்தாலும் இனி ரயில் விபத்து நடக்காது...கவாச் சோதனை வெற்றி......முழு விவரம்...வீடியோ

அட்மின் மீடியா
0

விபத்தில்லாமல் ரயில்களை இயக்க உள்நாட்டு தயாரிப்பான உலகத்தரம் வாய்ந்த "கவச்" இந்திய ரயில்வேயின் தேசிய தானியங்கி ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 



கவாச் சிறப்பம்சம்:-

இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்ட இந்த கவச் (Kavach) தொழில்நுட்பம் உலகின் மலிவான தானியங்கி ரயில் மோதல் பாதுகாப்பு அமைப்பாக நம்பப்படுகிறது. 

இந்த தொழில்நுட்பம், 'ஜீரோ ஆக்சிடென்ட்' என்ற இலக்கை அடைய ரயில்வேக்கு உதவும். சிவப்பு சிக்னலைத் தாண்டியவுடன் ரயில் தானாகவே பிரேக் போடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

மேலும் டிரைவர் ஏதேனும் தவறிழைத்தால் கவாச் ஆடியோ-வீடியோ மூலம் முதலில் எச்சரிக்கும். பதில் வரவில்லை என்றால், ரயிலில் தானியங்கி பிரேக் போடப்படும். இதனுடன், இந்த அமைப்பு ரயிலை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக இயக்க அனுமதிக்காது.


சோதனை:-

தெற்கு மத்திய ரயில்வேயில் குல்லாகுடா-சிட்கிட்டா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது இரண்டு ரயில் என்ஜின்கள் எதிரெதிரான திசையில் வருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இந்த என்ஜின்களில் பொருத்தப்பட்ட கவாச் விபத்து தடுப்புக் கருவி தாமாகவே செயல்பட்டு 380 மீட்டருக்கு அப்பால் இரண்டு எஞ்சின்களையும் நிறுத்தி விட்டது. இதே போல் சிவப்பு சமிக்ஞை விளக்கு வரும் போது ஓட்டுனர் பிரேக்கை பயன்படுத்தாமலேயே கவாச் கருவி என்ஜின் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. 

இணைப்பு பாதைகள் வரும் போது ரயில் வண்டியின் வேகத்தை மணிக்கு 60 கி.மீ. என்பதிலிருந்து மணிக்கு 30 கி.மீட்டராக கவாச் கருவி தானாகவே குறைப்பதையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த பரிசோதனை நடத்தப்பட்ட போது ரயில்வே அமைச்சருடன் ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு வி கே திரிபாதி, இதர மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

வீடியோ பார்க்க:-

 

https://twitter.com/RailMinIndia/status/1499660011244441604

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback