ஹிஜாப் வழக்கு ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும்-உச்சநீதிமன்றம்
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்தும், சீருடை அணிந்து வருவதை கட்டாயமாக்கியும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து கல்லூரி மாணவிகள் சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீட்ஷித், காஜி ஜெய்பூனிசா மொஹிதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது
.இவ்வழக்கில் ‘கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஒரே சீரான சீருடை அணிந்துவர வேண்டும் என்று மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது,’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்கள் மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்செய் ஹெக்டே இன்று சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டார். ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்