காமெடி நடிகராக இருந்தவர் இன்று பஞ்சாப் முதல்வர்.... முழு விவரம்
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கடந்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்றது
பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது
ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களிலும்
காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும்
அகாலிதளம் 3 இடங்களிலும்
மற்ற கட்சி 2 இடங்களிலும்
பாஜக கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது
மேலும் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் தோல்வியை சந்தித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சடோஜ் கிராமத்தில் ஜாட் சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி படிப்பை முடித்து காமெடி நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். 48 வயதாகும் இவர், டிவி சேனல்களில் காமெடி கதாபாத்திரங்கள் நடித்து மக்களிடையே பிரபலமான பக்வந்த் மான் கடந்த 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
மேலும் கடந்த 2014ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.இந்நிலையில், 2022ம் ஆண்டு பக்வந்த் மான் பஞ்சாப் மாநில முதல்வராகிறார்
Tags: இந்திய செய்திகள்