Breaking News

அந்தமானில் நாளை உருவாகின்றது இந்த வருடத்தின் முதல் புயல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி அசானி புயலாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் புயலான அசானி வரும் 21-ந் தேதி அந்தமான் நிக்கோபர் தீவுகள் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




நேற்று காலை தெற்க்கு வங்ககடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நிலவுகிறது



இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக   தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 19 ம் தேதி காலை நிலவக்கூடும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.வட திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 20-ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-இல் புயலாக வலுப்பெறும். 21-ல் புயலாக உருவெடுத்து பின் வடக்கு- வடகிழக்கில் நகர்ந்து வங்கதேசம்- மியான்மர் கரையோரத்தில் 22-ல் நிலைபெறும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலுக்கு அசானி என பெயர் இடபட்டுள்ளது

தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தமான் - நிகோபார் தீவுகளில் அதிதீவிர கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.புயல் எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 22 ஆம் தேதி வரை மூடப்படுவதாலும், சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback