ஜப்பானில் புகுஷிமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7.3 ரிக்டர் அளவில் -சுனாமி எச்சரிக்கை!
அட்மின் மீடியா
0
ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே நேற்று இரவு 7.3 ரிக்டர் அளவில் கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு 20 லட்சம் வீடுகளில் மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்ட தகவலில் இந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலியாகியுள்ளார்கள், 94 பேர் காயமடைந்தனர்என தகவல் வெளியாகி உள்ளது, ஆனால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிகின்றது
நிலநடுக்கத்தால் சுமார் 20 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கிய நிலையில், சேதமடைந்த மின் இணைப்புகள் விரைவில் சீர் செய்யப்படும் என பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2011ல் இதே புகுஷிமா கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அங்கு பெரிய சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்க வீடியோ பார்க்க:-
https://twitter.com/anegi548/status/1504151194725347329
Tags: வெளிநாட்டு செய்திகள்