Breaking News

இந்தோனேசியா, மலேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டரில் 6.8ஆக பதிவு

அட்மின் மீடியா
0

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. 



சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கின. நில நடுக்கம் நன்கு உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள், அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேத விவரங்கள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை 

இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது. இந்த சக்தி வாயந்த் நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதேபோல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் இன்று அதிகாலை 4.06 மணிக்கு கடல் மட்டத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது இந்தோனேஷியாவின் மையப்பகுதி கடலோர நகரமான பரியாமனுக்கு மேற்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது என்று யுஜிஎஸ்ஜி தெரிவித்துள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback