Breaking News

6000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு என கூறிய உக்ரைன் யாரும் நம்பாதீங்க ... அதெல்லாம் பொய் என மறுத்த ரஷ்யா

அட்மின் மீடியா
0

ரஷ்ய ராணுவ வீரர்கள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வரும் நிலையில், போர் தொடங்கியதிலிருந்து தங்கள் தரப்பில் 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, உக்ரைனில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அவசர சேவை அமைப்பு அறிவித்துள்ளது. பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் என நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது உக்ரைன்

உக்ரைன் ராணுவமும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.அந்த வகையில்,உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலில் கடந்த 6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய படைகளைச் சேர்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்யா,உக்ரைனில் போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை தங்கள் நாட்டை சேர்ந்த 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும்,உக்ரைனுடனான போரில் இதுவரை 1597 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback