இனி 60 கிலோமீட்டருக்கு ஒரு டோல்கேட் தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
அட்மின் மீடியா
0
தேசிய நெடுஞ்சாலைகளில் இனி 60 கி.மீ தூரத்துக்கு இடையே ஒரேயொரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். ஒருமுறை சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டால் அடுத்த 60 கி.மீ தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது எனவும் தற்போது, 60 கி.மீ தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களுக்குள் அகற்றப்படும் என்றும் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் ஆதார் அட்டை வைத்திருக்கும் உள்ளூர் மக்களுக்கு பாஸ்களை வழங்க உள்ளோம் என நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட வேண்டும் ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன என நாடாளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான, எம்பியுமான தொல். திருமாவளவன் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்