Breaking News

5 மாநில தேர்தல் ஆட்சி அமைக்க போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் ...முழு விவரம்..

அட்மின் மீடியா
0

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. 

 


இதில் உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டமாகவும்,  கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. 

வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இந்த வாக்குகள் வரும் 10 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

 

உ.பி-யில் ஆட்சி அமைக்க போவது யார்? 

உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 

பெரும்பான்மையை பெற 202 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும்

ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், பாஜக 262-277, சமாஜ்வாதி 119-134, பகுஜன் சமாஜ் 7-15, காங்கிரஸ் 3-8 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 211-225, சமாஜ்வாதி 146 – 160, பகுஜன் சமாஜ் 14-24, காங்கிரஸ் 4-6 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உத்தராகண்டில் ஆட்சி அமைக்க போவது யார்?

உத்தராகண்ட் சட்டமன்றத்தில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன.ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 எல்ஏக்கள் தேவை

பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், ஆம் ஆத்மி மற்றும் இத கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்றும் 'டைம்ஸ் நவ்' கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பாஜக -29, காங்கிரஸ் -35, இதர கட்சிகள் -6 இடங்களில் வெற்றி பெறும் என்று C-Voter கணித்துள்ளது.

பாஜக -34, காங்கிரஸ் -33 - இதர கட்சிகள் -3 இடங்களிலும் வெற்றி பெறும் என்பது Poll of Polls இன் கணிப்பாக உள்ளது.

மொத்தமுள்ள 70 இடங்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 57 எம்எல்ஏக்களுடன் உத்தராகண்டில் தற்போது ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பஞ்சாபில் ஆட்சி அமைக்க போவது யார்?

மொத்த தொகுதிகள் : 117

இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி : 76 - 90காங்கிரஸ் : 19 - 31பாஜக கூட்டணி : 1 - 4சிரோமணி அகாலி தளம் : 7 - 11 பிற : 0 - 2

சிஎன்என் கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி : 56 - 61காங்கிரஸ் : 24 - 29பாஜக கூட்டணி : 1 - 6சிரோமணி அகாலி தளம் : 22 - 26

 

ோவாவில் ஆட்சி அமைக்க போவது யார்?

 

மொத்த தொகுதிகள் : 40

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில்

ஆம் ஆத்மி : 4 காங்கிரஸ் கூட்டணி : 16 பாஜக : 14 பிற : 4


மணிப்பூரில் ஆட்சி அமைக்க போவது யார்?

மொத்த தொகுதிகள் : 60

மணிப்பூரிலும் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமென ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback