Breaking News

மார்ச் 31 ஆதார் எண் - பான் இணைக்க கடைசி தேதி தவறினால்....

அட்மின் மீடியா
0

ஆதார் எண்ணை பான் கார்டுடன் மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் பயனர்களிடமிருந்து ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 - 2022 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்காவிட்டால், பயனர்களின் பான் கார்டு செல்லுபடியாகாமல் போய்விடும். 

வருமான வரிச் சட்ட பிரிவு 234H இன் படி, ஒரு பான் கார்டு வைத்திருப்பவர் தனது பான் எண்ணை ஆதார் அட்டையுடன் காலக்கெடுவுக்குள் இணைக்கத் தவறினால், அவர் ரூ.1000 தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். 

ஒருவேளை செயல்படாத பான் கார்டைப் பயன்படுத்தினால், அதற்காக நீங்கள் ரூ. 10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 

ஆதார்கார்டு பான்கார்டு இணைக்க


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback