2022-2023 வேளான் பட்ஜெட் எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு.... PDF
தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 – எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி ஒதுக்கீடு
சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.28.50 கோடி ஒதுக்கீடு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் அமைக்க ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு.
தேனீ வளர்ப்பு தொகுப்புக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு.
50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு.
வேளான் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில் மரம் வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு.
மஞ்சள், இஞ்சி இடுபொருட்களுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்படும்.
கருப்பட்டி உட்பட்ட பனை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கப்படும்.
பூண்டு சாகுபடியை அதிகரிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.
தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வேளாண் துறைக்கு ஒட்டுமொத்தமாக 33,007.68 கோடி ஒதுக்கீடு
60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் 5 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்.
வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.195 உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950 ஆக நிர்ணயம்.
ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறு தானியங்கள், பயறு வகைகளை விற்பனை செய்ய அனுமதி.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.
கைபேசி மூலம் இயக்கிடும் வகையில் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.5,000 மானியத்தில் வழங்கப்படும்.
2022-2023 வேளான் பட்ஜெட் எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு.... PDF
https://drive.google.com/file/d/1Nvzow9GpP5hMNGQMpwUCKn27BiSO8GO2/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்