Breaking News

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்....

அட்மின் மீடியா
0

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று மாலை நடைப்பெற்ற கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும், நகர்ப்புற பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவை குறித்தும் ஆலோசித்து ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அது தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback