Breaking News

TNPSC ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் விண்ணப்பிப்பது எப்படி.... முழு விவரங்கள்....

அட்மின் மீடியா
0

 TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் எனப்படும் ஒருமுறைப் பதிவு கட்டாயமாகும்.


அதற்க்கு முதலில்  https://apply.tnpscexams.in/registration?app_id=UElZMDAwMDAwMQ==  மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள் அதில் பயனாளர் குறியீட்டினை உருவாக்குக என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உங்களுக்கு வேண்டிய லாகின் ஜடியை பதிவு செய்து அதற்க்கு பக்கத்தில் உள்ள பயனாளர் குறியீடு உள்ளதா எனபதை கிளிக் செய்யவும்...

அடுத்து வரும் பக்கத்தில் 

உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், தாயார் பெயர், ஆதார் எண்

பாலினம், பிறந்த இடம், சொந்த மாவட்டம், தந்தையார் பிறந்த இடம், தாய்மொழி, தேசிய இனம், மதம், சாதி, 

பத்தாம் வகுப்பு சான்று பதிவு எண், தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம், பத்தாம் வகுப்பு கல்விமுறை, பத்தாம் வகுப்பு சான்றிதழ் எண், 

இமெயில் முகவரி, மொபைல் எண்,  தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் 

அடுத்து தோன்றும் பக்கத்தில் உங்களது போட்டோவையும், கையெழுத்தையும்  அப்லோட் செய்ய வேண்டும்.

அடுத்து பணம் செலுத்திகொள்ளுங்கள்., பதிவு முடிவடைந்தவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். அதனைக்கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback