Breaking News

FACT CHECK கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்ட மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்ட பெண் கல்லூரிக்கு மட்டும் புர்கா அணிந்து வருவதாகவும், வெளியே செல்லும் போது புர்கா அணியாமல் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து மாடர்னாக இருப்பதாகவும் சில புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?
 

கர்நாடகாவில் ஹிஜாப், காவித்துண்டு விவகாரம் தலைதூக்கிய நேரத்தில் மாண்டியா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் புர்கா அணிந்து வந்த முஸ்லீம் மாணவி ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு செல்லும் வேளையில் காவித்துண்டு அணிந்து கொண்டு ” ஜெய் ஸ்ரீராம்” எனக் கோசமிட்டுக் கொண்டு இருந்த சில ஆண் மாணவர்களை பார்த்து ” அல்லா-ஹூ-அக்பர் ” என குரல் எழுப்பி கையை உயர்த்தி சென்றார். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியது.

கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்து மறித்த மாணவர்களுக்கு முன்பாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு, ஹிஜாப் அணிந்து சென்ற பெண் இவர்தான் என்று பரவுகின்ற புகைப்படம்  அனைத்தும் பொய்யானது ஆகும்.

புகைப்படம் 1:-

அவர் கர்நாடகாவைச் சேர்ந்த இளம் சமூகப்போராளி, எழுத்தாளர் மற்றும் ஜனதா தள் கட்சியின் உறுப்பினரான நஜ்மா நசீர் என்பவராகும் ஆனால் அந்த பெண்ணின் புகைப்படத்தைகர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் என்று கூறிய பெண் என தவறாக பரப்பி வருகின்றார்கள்
 
  புகைப்படம் 2:-
 
அடுத்ததாக, ஜீன்ஸ், டி-சர்ட் என மாடர்ன் உடையில் இருக்கும் மற்றும் ஒரு பெண் புகைப்படம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மாடல் தான்யா ஜேனா என்ற பெண்ணின் புகைப்படம் ஆகும் அதனை யாரோ போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்து நஜ்மா நசீர் முகத்தை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.facebook.com/rj.najmanazeerchikkanerale

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.instagram.com/tanyajena/?hl=en

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback