BREAKING உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றியது ரஷ்யப் படை
ரஷ்யப் படைகளால் செர்னோபில் அணு உலை கைப்பற்றியுள்ளது
இன்று காலை தான் உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் தொடங்கப்படும் என ரஷ்யா அதிபர் புதின் அறிவித்திருந்தார். ஒரே நாளில் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா உக்ரைன் பகுதிகள் முழுவதிலும் வெடி குண்டுகள் மழை பொழிகிறது என்றே சொல்லலாம். உக்ரைனில் உள்ள . ஆயுதக்கிடங்கு, ராணுவத் தளவாட நிலையம், இராணுவ பயிற்சி மையங்கள், விமான தளங்கள் போன்றவற்றை ரஷ்யா அழிக்க தொடங்கியுள்ளது..உக்ரைனில் பல இடங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடங்கி உள்ளன.மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியிருக்கும் நிலையில், ரஷ்யாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்