BREAKING அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
அட்மின் மீடியா
0
வாக்குப்பதிவின் போது திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை ( பிப் 19 ) அன்று நடந்து முடிந்தது. ஆனால் இந்த தேர்தலின்போது சென்னை ராயபுரத்தில் 49வது வார்டில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் தாக்கினர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து திமுக தொண்டரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் .
Tags: தமிழக செய்திகள்