BREAKING : ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் என்னென்ன..? முழு விவரம்....
தமிழ்நாட்டில் மார்ச் 2ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு
புதிய தளர்வுகள் என்ன?
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.
பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.
வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருமணம், திருமண சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சமாக 200 நபர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 நபர்கள் மிகாமல் அனுமதிக்கப்படும்.
நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது
தமிழக அரசின் அறிவிப்பின் முழு விவரம்..
https://drive.google.com/file/d/17vNs_XnYIjo6Rq0iBXCGhD0CYltFAFg0/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்