Breaking News

BREAKING குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்! 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பைக் ஓட்டக் கூடாது!! மத்திய அரசு

அட்மின் மீடியா
0

இருசக்கரவாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது

 


 

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோட்டார் வாகன சட்டம் 1989ன் கீழ் உள்ள 138 விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லும் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இருசக்கர மோட்டார் வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும் என்றும் குழந்தைகள் பயணிப்பதால், இருசக்கர வாகனத்தை அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில் இத்தகைய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்.. இந்த நடவடிக்கைகள் 2023 பிப்.15 முதல் அமலுக்கு வருவதாகவும் சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

 மத்திய அரசின் அறிவிப்பை படிக்க:-

https://twitter.com/MORTHIndia/status/1493870229478207491

MoRTH has made mandatory a safety harness and crash helmet for children below 4 years being carried on a two-wheeler with a restricted speed limit of 40 kmph.
These rules will come into force from 15 February 2023. pic.twitter.com/Nwmjz1wpgA

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback