Breaking News

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்கவேண்டாம் அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அட்மின் மீடியா
0

ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்' என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

 


இந்நிலையில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு மீதான வழக்கில், ஹிஜாப்  தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது. கர்நாடகாவில் நடப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். உரிய நேரத்தில் வழக்கை விசாரிப்போம்.ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback