Breaking News

பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளை கொலை செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது...

அட்மின் மீடியா
0

தனியார் தொலைகாட்சியில் காமெடியோடு சமூக கருத்துக்களை சொல்லும் வகையில் ஷோவில் பெரியார் வேடமணிந்த குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சி பலரும் வரவேற்றனர்


இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளை பற்றி வெங்கடேஷ் குமார் பாபு என்ற நபர் அந்த குழந்தையை அடித்து கொன்று ரோட்டில் தொங்க விட வேண்டும் என்றும், அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயம் வரும் ஏன் வா.உ.சி., தேவர், பாரதி , நேதாஜி இவர்கள் வேஷம் போட முடியாதா என்றும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற பெயரில் இருந்த அந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்திருந்தார்

இந்நிலையில் பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளை கொலை செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு (36) என்பவர் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்


.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback