பப்ஜி மதனுக்கு சிறையில் வசதி செய்து கொடுக்க லஞ்சம்? இணையத்தில் வைரல் ஆகும் ஆடியோ
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகைகள் செய்து தரக்கோரி அவரது மனைவி கிருத்திகாவும் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்று ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தடைச்செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை முறைகேடான வகையில் குழுவாக விளையாடியதாகவும், விளையாட்டின்போது பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகவும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆபாசமாக பேசியது , பண மோசடியில் ஈடுபட்டது என அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ஜூலை மாதம் 6 அம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க சிறைத்துறை அதிகாரிகளிடம் அவரது மனைவி கிருத்திகா லஞ்சம் கொடுப்பது குறித்து பேசியிருக்கிறார்..
அதில் ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்கும் சிறைத்துறை அதிகாரியிடம் பணத்தை தயார் செய்து கொண்டிருப்பதாக கிருத்திகா கூறுகிறார். அதற்கு சிறைத்துறை அதிகாரியும் சரி.. பரவாயில்லை.., மதன் நன்றாக இருக்கிறார்.. என்று கூறுகிறார். மேலும் கிருத்திகா சிறைத்துறை அதிகாரிக்கு ரூ. 25 ஆயிரம் கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சம் கேட்கும் ஆடியோ விவகாரம் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்