அனைத்து கார்களிலும் நடு இருக்கைகளுக்கும் மும்முனை சீட் பெல்ட் கட்டாயம் மத்திய அரசு
அனைத்து கார்களிலும் நடு இருக்கைகளுக்கும் மும்முனை சீட் பெல்ட் கட்டாயம் மத்திய அரசு
பொதுவாக காரில் பயணிப்பவர்கள் வாகன ஓட்டுநர் , ஓட்டுநர் அருகே அமர்ந்திருப்பவர் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களில் இருவர் மட்டுமே மும்முனை என்று சொல்லப்படும் த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட் அணிய முடிகிறது.
பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு விமானங்களில் பயன்படுத்துவது போல இடுப்பில் பொருத்தப்படும் இருமுனை சீட்பெல்ட் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனால் விபத்து ஏற்படும் நேரங்களில் நடுப்பகுதியில் அமர்ந்து இருப்பவரின் பாதுகாப்பு என்பது மற்றவர்களை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது.இந்நிலையில் இனி நடு இருக்கைகளுக்கு மும்முனை சீட்பெல்ட் அமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்