Breaking News

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

அட்மின் மீடியா
0

கர்நாடக மாநிலம்,  உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். 




இதற்கு எதிர்ப்பை பதிவைச் செய்யும் விதமாக இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் காவி துண்டு போட்டுக்கொண்டு கல்லூரிக்கு வந்தனர் இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் இந்து, இஸ்லாமிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றினார். அதன்படி தலைமை நீதிபதி ரிதுராஜ், நீதிபதிகள் கிருஷ்ணா தீக்சித், காஸி ஆகியோர் இன்று விசாரணையை தொடங்கினர். 

அப்போது ஊடகங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தனர். இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் நீதிமன்ற விவகாரங்களை ஊடங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். மேலும் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளில் வருமா, இஸ்லாமிய நடைமுறைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயமா என ஆய்வுசெய்வதாகவும் கூறினர். 

இறுதி உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவி துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்ற இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என கர்நாடக ஐகோர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு விசாரணை முடியும் வரை ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களை பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் அணிந்து வர தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு எதிராக மாணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback