உக்ரைன் ரஷ்யா போர் இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா. பொதுசபை கூட்டம்!
உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரமாக கூடுகிறது.
இந்நிலையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரக்கூட்டம் நியூயார்க்கில் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக நடைபெற்ற அவசர கூட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் ஆதரவு தந்த நிலையில் ரஷ்யா அதை எதிர்த்தது.மேலும்,பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற 3 நாடுகளான இந்தியா,சீனா,ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
40 ஆண்டுகளில் முதல் முறையாக அவசரக்கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஐ.நா பொதுச் சபை என்றால் என்ன?
ஐ.நா. சபை என்பது ஐக்கிய நாடுகளின் சபை ஆகும். ஐக்கிய நாடுகள் என்பது ஆங்கிலத்தில் United Nations Organization எனப்படுகின்றது.
ஐநா சபை என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 45 நாடுகள் கூடி ஒரு சபையை அமைத்தனர் இனிமேலும் உலகப் போர் வேண்டாம் என்று அதுதான் ஐக்கிய நாடுகள் சபை என்று அழைக்கப்படுகிறது இது நிரந்தர உறுப்பு நாடுகளும் 15 தற்காலிக நிரந்தர உறுப்பு நாடும் 193 உறுப்பு நாடுகளும் உள்ளன
ஐக்கிய நாடுகள் சபை என்பது உலகத்தையே கைக்குள் வைத்திருக்கும் ஒரு மிகப் பெரும் சக்தி கொண்ட சர்வதேச அமைப்பாக நாம் இதனைக் கொள்ளலாம்.
ஐக்கிய நாடுகள் சபையானது அதிகாரபூர்வமாக 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
Tags: வெளிநாட்டு செய்திகள்