அனைத்து நீதிமன்றங்களிலும் பிப்ரவரி 7 முதல் நேரடி விசாரணை....என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து கட்டுக்குள் இருப்பதால் நீதிமன்றங்களில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி காணொளி அல்லது இரண்டு முறைகளிலும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகும் மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என்றும்.
வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் அறைகள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்