Breaking News

வேடிக்கை பார்க்கும் உலகநாடுகள்.. தனியாக போராடுகிறோம்- உக்ரைன் அதிபர் உருக்கம்..

அட்மின் மீடியா
0

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலில், நேரடியாக பல்வேறு நாடுகளின் தலைவர்களை தொடர்புகொண்டு உதவி கேட்டும், யாரிடம் இருந்தும் பதில் இல்லை என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.மேலும் ரஷ்யா அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்



இதுகுறித்து நேற்று அவர்வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் அதில்

பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா இன்று 2 நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது என்றும், உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் புகுந்துவிட்டன என்றும் அவர் தெரிவித்தார். உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் ரஷ்ய மக்களுக்கு நன்றி தெரித்த் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக தெரிவித்தார்.

முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ, அப்படியே 2வது நாளிலும் தனியாக எதிர்கொள்வதாகவும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனை முற்றிலுமாக கைவிட்டுவிட்டதாக உருக்கமாக கூறினார். இதை எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தருகிறது என்றும், சொன்ன வாக்குறுதியை மீறி ராணுவ தளவாடங்களுடன் குடியிருப்பு பகுதிகளையும் ரஷ்யா தாக்கி வருவதாக கவலை தெரிவித்தார்.உக்ரைன் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக்கூறிய அவர் முதலாவதாக தனது உயிருக்கும், 2வதாக தனது குடும்பத்தையும் ரஷ்ய படைகள் குறிவைத்துள்ளதாக தெரிவித்தார். உக்ரைனுக்கு உதவுமாறு நேட்டோ அமைப்பு உள்ளிட்ட 27 நாடுகளிடம் உதவி கேட்டதாகவும், நேரடியாகவே நாடுகளின் தலைவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டதாக கூறினார். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=wVqU8VzhPps

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback