உக்ரைனில் ரஷ்யா குண்டுமழை 3ம் நாள் முடிவில்....198 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்....
உக்ரைன் போர் தொட்ர்ந்து 4 வது நாளாக நீடித்து வரும் நிலையில் நேற்று 3 ம் நாள் முடிவில் உக்ரைன் மீது ரஷ்யா குண்டுமழை பொழிந்தது என்றே கூறலாம்
தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உக்ரைனில் நேற்று இரவில் விடிய விடிய சண்டை நடந்தது. இரவு நேரத்தில் ரஷியப்படைகளின் வான்தாக்குதலை அடையாளப்படுத்தும் சைரன்கள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் மக்கள் பாதாள ரெயில் நிலையங்களிலும், பதுங்கு குழியிலும், பாதாள அறைகளிலும் , பாதாள சாக்கடைகளிலும் உயிருக்குப் பயந்து அஞ்சி இரவில் தூங்காமல் எப்பொழுது என்ன நடக்கும் என அஞ்சி கொண்டு உள்ளார்கள்
மேலும் உலக நாடுகள் உக்ரைனுக்கு நேரடியாக படை உதவிகளை வழங்கவில்லை. ராணுவ உபகரணங்கள், பொருளாதார ரீதியான உதவிகளை மட்டுமே உக்ரைனுக்கு உலக நாடுகள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயிரம் டாங்கர் எதிர்ப்பு ஆயுதம், 500 ஸ்டிங்கர் ஏவுகணைகளை வழங்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. 2,000 இயந்திரத் துப்பாக்கிகள், 3,800 டன் எரிபொருள் வழங்க பெல்ஜியம் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகள் என்று மொத்தம் 25 நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. இதனால் இந்தியா யாருக்கும் உதவி செய்யவில்லை.
உக்ரைன் மீது அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்த போவதாக ரஷ்யா அறிவித்தும் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதனால் தாக்க போகிறோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த போர் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்