Breaking News

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி..

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி திமுக கூட்டாணி அபார வெற்றி பெற்றுள்ளது


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. அதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

மாநகராட்சிகளுக்கு 1,347 வார்டு உறுப்பினர்களும், நகராட்சிகளுக்கு 3,843 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சிகளுக்கு 7,621 வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளனர். 

இன்று காலை 8 மணிக்கு  வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்துவந்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. அதன்படி 21 மாநகராட்சிகளில் மொத்தம் உள்ள 1,347 வார்டுகளில், 4 வார்டுகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டன. அதில் திமுக 948 வார்டுகளிலும், அதிமுக 164 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


மொத்த பதவியிடங்கள் 1372/1374


தி.மு.க 951

இ.தே.கா 73

சி.பி.ஐ 13

சி.பி.ஐ(எம்) 24


அ.இ.அ.தி.மு.க 164

பி.ஜே.பி 22

மற்றவை 125


மொத்தம் 1373

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback