TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு வெளியானது! புதிய சிலபஸ் முழு விவரம்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது.
அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாடத்திட்டத்தை www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக TNPSC செயலாளர் பி.உமா மகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்