Breaking News

FACT CHECK ஷாருக்கான் மகன் ஆர்யாகான் என பரவும் வீடியோ உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஷாருக்கான் மகன் ஆர்யாகான்  போதை தலிக்கேறி பன்னும் செயலை பாருங்க என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள நபர் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யாகான் கிடையாது அந்த வீடியோவில் உள்ள நபர் கனடா நாட்டை சேர்ந்த Bronson Pelletier என்ற நடிகர் ஆவார்

அந்த வீடியோ கடந்த  2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் நடந்தது ஆகும்

மேலும் அந்த வீடியோ பற்றிய செய்தி 03.01.2013 அன்று பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் டெய்லி மெயிலும் வந்துள்ளது

தற்போது ஷாருக்கான் மகனுக்கு  23 வயதுதான் ஆகின்றது பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ 2012 ம் ஆண்டு எடுக்கப்பட்டது ஆகும், 9 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஷாருக்கான் மகனுக்கு 14 வயது தான் இருக்கும், ஆனால் அந்த வீடியோவில் உள்ள நபர் 14 வயதை தாண்டிய ஒரு நபர் ஆவார்

சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் நடிகர் ஷாருக்கான் மகன் என்று வேண்டுமென்றே  சமூக வலைத்தளங்களில் பொய்யாக பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.dailymail.co.uk/tvshowbiz/article-2256407/Video-emerges-intoxicated-Twilight-star-Bronson-Pelletier-publicly-urinating-airport.html?ito=feeds-newsxml 

 

 https://en.wikipedia.org/wiki/Bronson_Pelletier

 

அட்மின் மீடியா ஆதாரம்:-

https://www.youtube.com/watch?v=3ac4R2zVttE

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback