BREAKING: துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. அங்கு கடந்த 30.12.2021 அன்று வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின்போது வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு, தவறுதலாக 11 வயது சிறுவன் தலையில் பட்டுள்ளது
இதில் படுகாயமடைந்த சிறுவன் புகழேந்தியை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது பின்னர் புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் கடந்த4 நாட்களாக சிகிக்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிக்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Tags: தமிழக செய்திகள்