புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்....
அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் 9 லட்சம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் பொங்கல் சிறப்பு திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதி எனவும் குறிப்பிட்டார்.
Tags: தமிழக செய்திகள்