யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது?- உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி
பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஜாமின் மனு இன்று மதுரை உயர்நீதிமன்றகிளையில் விசாரணைக்கு வந்தபோது மாண்புமிகு நீதிபதி அவர்கள் ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளி தான் ஏனெனில் யூடியூப்பை பார்த்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது என குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் தருகின்றனர்.
எனவே அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவும் வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறிய நீதிபதி அவர்கள் யூடியூப்பிற்கு ஏன் மொத்தமாக தடை விதிக்க கூடாது? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என தமிழ்நாடு அரசு ஆராய வேண்டும். யூடியூப்பில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
Tags: தமிழக செய்திகள்