ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது. அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் மனுதாக்கல் செய்திருந்தார் அதன்பின்பு தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை தேடி வந்த காவல்துறையினர் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்துவரபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்
இதற்க்கிடையில் உச்சநீதிமன்றத்தில் அவரது முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வெளியூர் செல்லக்கூடாது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்