தமிழக அரசுக்கு ஜமா அத்துல் உலமா சபையின் வேண்டுகோள்.....
அட்மின் மீடியா
0
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
நேற்றைய தினம் (05.01.2022) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஒமிக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் தொற்று பெருமளவில் பரவக்கூடிய பல இடங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிற நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மத வழிபாட்டுத்தலங்களில் பொது மக்கள் வழிபடத் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக கூடுகின்ற எல்லா இடங்களும் நோய்த் தொற்று பரவலுக்கான வாய்ப்புள்ளவை தான் என்றிருக்கையில் வழிபாட்டுத்தலங்களில் மட்டும் பொதுமக்கள் வழிபட வருவதைத் தடுப்பது ஏற்புடையதல்ல,
பல்வேறு காரணங்களால் மன நெருக்கடிக்கு ஆளாகும் மனிதர்களுக்கு பெரும் ஆறுதல் அளிப்பவை கேளிக்கைக் கூடங்களை விட ஆன்மிக உணர்வும் இறை வழிபாடும் மட்டுமே
எனவே தமிழ்நாடு அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். மனிதனுக்கும் அவனது மத உணர்வுகளுக்கும் வழிபாட்டுக்கும் எந்த அரசுகளும் குறுக்கே நிற்பது சரியல்ல, எனவே வழிபாட்டுதலங்களில் பொதுமக்கள் வழிபடும் வாய்ப்பை அரசு வழங்க வேண்டும்.
திரையரங்குகள், திருமண நிகழ்வுகளுக்கு வழங்கப்பட்டிருப்பது போல நபர்களின் எண்ணிக்கை அளவைக் குறிப்பிட்டு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழிபாட்டுத் தலங்களுக்கும் வழங்குவதே பொருத்தமானது பாரபட்சமற்றது என்று தமிழ்நாடு அரசை ஜமாஅத்துல் உலமா சபை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்திலுள்ள கண்ணியமிகு ஆலிம்களும் ஜமாஅத்துக்களின் நிர்வாகப்பெருமக்களும் நோய்த்தொற்றின் கடுமையை கவனத்தில் கொண்டு நிலைமைக் கேற்ப அரசின் அறிவிப்பை கடைபிடிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொள்கிறது. என அதில் கூறப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி